@sweetykwt: ரமழான் விடைபெற போகிறது இன்னும் சில தினங்களில் .பாவங்கள் நிறைந்த கருமையான உள்ளத்தை நன்மையெனும் மின்னிடும் தாரகையால் வெள்ளையாக்கி; இன்மையெனும் தேர்வறையில் மறுமையின் பிறை நிலவாய் ரமழான் பூத்தது. நன்மைகள் மூலம் இறையிடம் கையேந்தும் யாசகம் தாகத்தின் மூலம் ஏழையின் இரைப்பையின் ரகசியம் இவையெல்லாம் கற்றுக்கொண்டேன் ரமழானெனும் விடியலில்.., கண்களின் முத்துக்களில் கண்ணீர் விலையானது உள்ளத்தின் பாவங்கள் அகற்றும் கடலலையானது மனிதனை மனிதனாக்கும் பக்குவத்தின் புனிதமானது நரகத்தின் வாசல் அடைக்கப்பட்டு சுவர்க்கத்தின் வாசல் ஆன்மீக பல்கலைக்கழகத்தில் பட்டோலை வாங்கிய அழகிய ரமழானே🤲வைகறை வெளுக்கும் முன் ஸஹர் செய்து பொழுதின் உதயத்தில் கூட்டாக நோன்பை துறந்து இரவு வணக்கங்களை சுகமான நின்றி வணங்கி நிலையான வாழ்க்கையை சிந்திக்க வைத்த ரமழானே போய் வா; மண்ணிலிருந்து விண்நோக்கிய நபிகளார் மிஃராஜ் விண்ணிலிருந்து மண்ணில் அருளிய அல்குர்ஆன் வலிமையோடு போராடிய வெற்றியின் யுத்தங்கள் தியாகத்தில் வாழ்ந்த இறைநேசர் வாழ்வையும் உள்ளத்தில் மின்னல் போன்ற பிரகாசத்தால் மீண்டும் விளக்கேற்றிச் செல்கிறாயே ரமழானே 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲