@globalin24: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நீதிமன்றம் பிணை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 2023ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதியன்று, ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதுபற்றி பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இம்ரான் கான் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. . பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது, தேசியளவில் அவரது ஆதராவளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.