@cobeoppo0: #VNOPPOReno16 ##TGDĐReno16 #ChuyenGiaSanAnhThoiThuong

cobeoppo0
cobeoppo0
Open In TikTok:
Region: VN
Friday 10 July 2026 03:20:17 GMT
30
1
0
0

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @cobeoppo0, please go to the Tikwm homepage.

Other Videos

அழகான ஆணும், அழகான பெண்ணும் சேர்ந்தால் திருமணம் மட்டும் தான் அழகாக தெரியும்... ஆனால் மார்க்கமுள்ள ஆணும், மார்க்கமுள்ள பெண்ணும் சேர்ந்தால் வாழ்க்கையே அழகாக தெரியும். காலையில் எழுந்தவுடன் ஒரு தேநீரில் இருந்து சண்டை ஆரம்பிக்கும்.
அழகான ஆணும், அழகான பெண்ணும் சேர்ந்தால் திருமணம் மட்டும் தான் அழகாக தெரியும்... ஆனால் மார்க்கமுள்ள ஆணும், மார்க்கமுள்ள பெண்ணும் சேர்ந்தால் வாழ்க்கையே அழகாக தெரியும். காலையில் எழுந்தவுடன் ஒரு தேநீரில் இருந்து சண்டை ஆரம்பிக்கும். "சீனி இல்ல, தேத்தண்ணி சூடா இல்ல" என்று கணவன் திட்டுவான். மனைவி பதிலுக்கு "நீங்களே போட்டு குடிங்க" என்பாள். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் வரை போர் தான். "பிள்ளைக்கு சாப்பாடு கட்டலையா? தண்ணி போத்தல் எங்க?" என்று இருவரும் மாறி மாறி சத்தம் போடுவார்கள். பிள்ளைகளுக்கு முன்னால் இவர்கள் தான் உலகின் மிகப்பெரிய எதிரிகள் போல் இருப்பார்கள். பகல் உணவுக்கு போன் வரும். "சாப்பாடு உப்பு அதிகம், கறி சரியில்ல" என்று கணவன் குறை சொல்வான். மனைவி "வேணும்னா வெளியில சாப்பிடுங்க" என்று போனை வைத்து விடுவாள். பார்ப்பதற்கு இவர்கள் பிரிந்து விடுவார்களோ என்று தோன்றும். ஆனால் இதுதான், "எவ்வளவு கேவலமாக திட்டி சண்டை போட்டுக் கொண்டாலும் வெட்கமே இல்லாமல் அடுத்த நொடியே பேசிக்கொள்பவர்களே சிறந்த கணவன் மனைவி" என்பதன் அர்த்தம். இரவு எல்லோரும் உறங்கிய பிறகு, பகலில் அடித்த சண்டை எல்லாம் அங்கேயே முடிந்து விடும். கணவன் தன் மனைவியை மெதுவாக அரவணைத்து, "சரி விடு, காலையில நான் கொஞ்சம் கோபப்பட்டுட்டேன்" என்று ஒரு சிறு அன்பான வார்த்தை சொல்வான். இல்லையென்றால் அவளுக்கு பிடித்த ஒரு சிறு பரிசு, ஒரு சொக்லேட், அல்லது நெற்றியில் ஒரு அன்பான முத்தம் கொடுத்து சமாதானப்படுத்துவான். அந்த ஒரு நொடியில் மனைவி சந்தோசப்பட்டு விடுவாள். காலையில் இருந்து மாலை வரை போட்ட சண்டைகள் எல்லாம் அந்த ஒரு அரவணைப்பில் கரைந்து போய்விடும். மனைவியின் அந்த சிரிப்பில், கணவனின் அந்த பாசத்தில் தான் அந்த வீடே மீண்டும் உயிர் பெறுகிறது. அழகு முக்கியமில்லை, பணம் முக்கியமில்லை. ஒருவரை ஒருவர் மன்னித்து, அரவணைத்து வாழும் அந்த மார்க்கமான அன்பு தான் வாழ்க்கையை அழகாக்குகிறது. 🖋️. NAFLI A (JAMALY)

About