@st.suman.report: காங்கேசன்துறையில் புதிய தபால் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு! 32.9 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள காங்கேசன்துறை புதிய தபால் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (25) காலை சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றது. நீண்ட காலமாகத் தபால் சேவைகளைப் பெற்றுக்கொள்ளச் சிரமப்பட்ட காங்கேசன்துறைப் பகுதி மக்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய தபால் நிலையம் ஒன்றை அமைக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகெங்கா சுதீஸ்னர், தபால் திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். #Jaffna #Kankesanthurai #PostOffice #SLPost #SriLanka