@jey41333: பிரபாவின் தவறான முடிவு கட்டாய ஆட்சேர்ப்பு என்கிறார் தமிழினி அந்த தலைமையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு… பின்னர் அதுவே பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது... “கட்டாய ஆட்சேர்ப்பு தவறான முடிவுகளில் ஒன்று!” தமிழினியின் நூல் வெளிப்படுத்தும் முக்கியமான விமர்சனம்... முன்னாள் மகளிர் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழினி எழுதிய ஒரு கூர்வாளின் நிழலில் என்ற சுயசரிதைநூல், அந்த இயக்கத்தின் உள்விவகாரங்கள், தலைமைத்துவம் மற்றும் போர்கால முடிவுகள் குறித்து பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. அவற்றில் மிகவும் கவனிக்கதக்கது, ஆட்களை கட்டாயமாக இயக்கத்தில் இணைத்து கொண்ட கொள்கை குறித்த அவரது விமர்சனமாகும். படையணியை பலப்படுத்துவற்கு பதிலாக… மக்களின் ஆதரவைப் பலவீனப்படுத்தியது.. போரின் தீவிரம் அதிகரித்த காலத்தில், இயக்கம் ஆளணி பற்றாக்குறையை எதிர்கொண்டது. குறிப்பாக, 2004ஆம் ஆண்டு கருணா பிரிவு ஏற்பட்டபோது, பெருமளவிலான பயிற்சி பெற்ற உறுப்பினர்கள் விலகி சென்தாக அக்காலச் செய்திகள் தெரிவித்தன. இந்தச் சூழலில், ஆட்களை கட்டாயமாக இயக்கத்தில் இணைத்து கொள்ளும் நடைமுறை மேலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. தமிழினி , கட்டாய ஆட்சேர்ப்பை ப தலைமையின் மிக தவறான முடிவுகளில் ஒன்றாக விமர்சித்துள்ளார். ஒரு இயக்கத்தின் வலிமை அதன் ஆயு தங்களிலும் படையணிகளின் எண்ணிக்கையிலும் மட்டுமல்ல அது சார்ந்திருக்கும் மக்களின் நம்பிக்கையிலும் இருக்கிறது.... ஆட்கள்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் விருப்பத்துக்கு மாறாக ஆட்சேர்ப்பு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள், மக்களிடையே அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தின... போதிய பயிற்சி இன்றி ஆட்கள் போர்முனைக்கு அனுப்பப்பட்டமை குறித்து தமிழினி விமர்சனம் முன்வைத்துள்ளார். தமிழினியின் எழுத்துகள், இயக்கத்தின் நோக்கங்களை மட்டும் அல்லாமல், அந்த நோக்கங்களை அடைவதற்காக எடுக்கப்பட்ட முடிவுகளையும் மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகின்றன. மக்களின் உரிமைகளையும் விருப்பங்களையும் புறக்கணித்து எடுக்கப்படும் முடிவுகள், குறுகிய காலத்தில் ஓர் அமைப்பின் ஆளணியை அதிகரித்தாலும், நீண்ட காலத்தில் அதன் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்க கூடும்... தமிழினியின் நூல் எழுப்பும் முக்கியமான கேள்வி இதுதான்: ஒரு போராட்டத்தின் வெற்றிக்காக எடுக்கப்படும் முடிவுகள், அந்த போராட்டம் பாதுகாக்க விரும்பிய மக்களையே பாதிக்க தொடங்கினால், அதன் விளைவுகளை எவ்வாறு மதிப்பிடுவது?
ஸ்டாலின்
Region: GB
Sunday 25 October 2026 15:45:56 GMT
Music
Download
Comments
Velayutham :
💯. உண்மை
2026-10-25 16:59:35
0
Wonderful :
@
2026-10-26 15:48:30
0
To see more videos from user @jey41333, please go to the Tikwm
homepage.