@ajjenistan: 🔴#வங்காள_விரிகுடாவில் வரலாற்றுச் சாதனை: அர்னாப் புயலைத் தொடர்ந்து இலங்கையை இன்று வரும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் – நாடு முழுவதும் உஷார் நிலை! வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலின் காலநிலை வரலாற்றில் இதுவரை எட்டப்படாத முற்றிலும் புதிய மற்றும் அரிய நிகழ்வாக, அரபிக்கடலில் உருவான சுழற்சி ஒன்று தமிழ்நாட்டைக் கடந்து வங்கக்கடலுக்குள் நுழைந்துள்ளது . இது யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவுக் கடற்பகுதியூடாக திருகோணமலையை அண்மித்து, 'அர்னாப்' புயலின் வழித்தடத்தைப் பின் தொடர்ந்து இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கரையைக் கடக்கவுள்ளது. ஒரே புயல் காலப்பகுதியில், கிட்டத்தட்ட அதே பாதையில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி கரையைக் கடக்கும் இந்த வரலாற்றுப் பதிவு ஒட்டுமொத்த தெற்காசிய வானிலை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். இந்த அதீத வானிலை மாற்றம் காரணமாக, வடக்கு, கிழக்கு, மேல், சப்ரகமுவா மற்றும் வடமேற்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கு மிகக் கனமழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ⚠️ #மாகாண_வாரியான_வானில_மற்றும்_விழிப்பூட்டல்_விவரங்கள் 1. 🚨வடக்கு மாகாணம் (விசேட அவதானிப்புப் பகுதி) ✅யாழ்ப்பாணம்: தீவகப் பகுதிகள் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ச்சியான கனமழை பெய்யும். யாழ். நகர் மற்றும் தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. ✅கிளிநொச்சி & முல்லைத்தீவு: பகல் முழுவதும் இடைவெளியின்றி கனமழை தொடரும். சுழற்சி முல்லைத்தீவை அண்மிக்கும்போது சில இடங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடும். ✅மன்னார்: மன்னார் தீவு மற்றும் பிரதான நிலப்பகுதிகளில் காலை 7:30 மணி முதல் பிற்பகல் வரை பலத்த மழை நீடிக்கும்; சில மணி நேரங்களுக்கு மிகக் கனமழை பதிவாகலாம். ✅வவுனியா: காலை முதலே கனமழை பெய்யத் தொடங்கி, சில பகுதிகளில் மிகக் கனமழையாக மாற வாய்ப்புள்ளது. எச்சரிக்கை: வடக்கு மாகாண மக்கள் 27.10.2026 காலை 7.00 மணி வரை மிகுந்த விழிப்புடன் இருப்பது அவசியமாகும். தாழ்நிலப் பகுதிகளில் சிறிய வெள்ள அனர்த்தங்கள் ஏற்படக் கூடும். 2. 🚨#மேற்கு & வடமேற்கு மாகாணங்கள் (விசேட அவதானிப்புப் பகுதிகள்) புத்தளம்: பகல் முழுவதும் பரவலாக கனமழையும், சில பகுதிகளில் மிகக் கனமழையும் பதிவாகலாம். தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிகழ்வுகள் சாத்தியமே. கொழும்பு & கம்பஹா: உளநிலைப் பகுதிகள் மற்றும் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்யும். தாழ்நிலப் பகுதிகளில் நீர் தேங்கும் அபாயம் உள்ளதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். 3. 🚨#சப்ரகமுவா & மேல் மாகாணம் இரத்தினபுரி: காலை தொடங்கும் கனமழை நண்பகலையும் தாண்டி நீடிக்கும்; சில இடங்களில் மிகக் கனமழை பெய்யும் என்பதால் விசேட கவனமுடன் இருக்க வேண்டும். களுத்துறை & கேகாலை: மதியம் 3:00 மணிக்குப் பின்னர் கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் கனமழை தீவிரமடையும். 4.🚨 #மத்திய மாகாணம் & ஊவா மாகாணம் நுவரெலியா & கண்டி: ஹட்டன், நுவரெலியா மற்றும் கண்டி நகரப் பகுதிகள் உட்பட மிதமானது முதல் சற்றுக் கனமான மழை பெய்யும். பதுளை: நகரப் பகுதியை அண்மித்து சற்றுக் கனமழை பெய்யக்கூடும். ⚠️ 🔴 ஏற்கனவே தொடர்ச்சியான மழை பெய்துள்ளதாலும், வரவிருக்கும் 72 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்பதாலும் நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை மற்றும் பதுளை மாவட்ட மக்கள் நிலச்சரிவு ஆபத்து குறித்து அதீது கவனம் செலுத்த வேண்டும். 5. 🚨 மாகாணம் திருகோணமலை & மட்டக்களப்பு: காலை மற்றும் பிற்பகல் வேளைகளில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. வாழைச்சேனை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும். அம்பாறை: பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை பெய்யத் தொடங்கும்; எனினும் கிழக்கு மாகாணத்தின் மற்ற மாவட்டங்களை விட இங்கு மழை சற்று குறைவாக இருக்கக்கூடும். 6. 🚨 மாவட்டங்கள் அனுராதபுரம் & பொலன்னறுவை: அனுராதபுரத்திலிருந்து தம்புள்ளை வரையிலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பதிவாகலாம். காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை & மொனராகலை: பரவலாக மிதமான மழை பெய்யும். ⚡ 🔴 💥இடி, மின்னல் எச்சரிக்கை: மழை பெய்யும் வேளைகளில் வளிமண்டலத்தில் அதிகப்படியான மின்சார தாக்கம் நிலவக்கூடும் என்பதால், பொதுமக்கள் இடி, மின்னல் அபாயங்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். 🔥#கடல் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை: வடக்கு, கிழக்கு, வடமேற்கு, மேற்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், மீனவர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்குச் செல்வதை முழுமையாகத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல்-: நாகமுத்து பிரதீபராஜா
Aj jenistan
Region: LK
Monday 26 October 2026 04:49:53 GMT
Music
Download
Comments
NAVEEN STAR ☆ :
😳😳😳
2026-10-26 08:10:39
0
Suya :
😁😁😁
2026-10-26 09:13:39
0
To see more videos from user @ajjenistan, please go to the Tikwm
homepage.