@rif.media.net: அவிசாவளை – கொழும்பு பேருந்தில் பணப்பையைத் திருட முயற்சியா? தப்பிச் செல்லும் நபர் CCTV காட்சியில்! இலங்கையின் NB-6101 இலக்கமுடைய அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தில், பெண் பயணி ஒருவரின் கைப்பையை வெட்டி, அதிலிருந்த பணப்பையைத் திருட முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது. சாலாவ சந்தியில் பேருந்தில் ஏறியதாகக் கூறப்படும் குறித்த நபர், சாலாவ இராணுவ முகாமுக்கு அருகில் ஏறிய பெண் பயணியின் பையைக் குறிவைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் பையிலிருந்து பணப்பையை எடுக்க முயன்றதை அவதானித்ததும், பேருந்திலிருந்து இறங்கிச் செல்லும் காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளன. ⚠️ பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் அனைவரும் தங்களது பணப்பைகள் மற்றும் பெறுமதியான பொருட்கள் குறித்து அவதானமாக இருக்கவும். குறித்த நபரை அடையாளம் தெரிந்தவர்கள், தகவல்களைப் பொறுப்புடன் சம்பந்தப்பட்ட பொலிஸாரிடம் தெரிவிக்கவும். #BreakingNews #TamilNews #SriLanka #TrendingNews #FYP