@stylishlysocial: Consider this your sign to plan a grown-up getaway. 😉🥂✨ Yaamava’ Resort & Casino in Highland, California, is perfect for switching up the usual routine with a little luxury, casino excitement, and a night away. Because sometimes you just need a change of scenery! 🎰🖤 Tap the link below to check rates! 👇 #tiktokgothrive #traveltrends #weekendgetaway #Yaamava #HighlandCalifornia

Jen | Stylishly Social 🌴🥂
Jen | Stylishly Social 🌴🥂
Open In TikTok:
Region: US
Wednesday 28 October 2026 01:40:06 GMT
494
32
0
5

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @stylishlysocial, please go to the Tikwm homepage.

Other Videos

உலக அளவில் தாஜ் ஹோட்டல் பிரபலமானது, அது மாத்திரமன்றி தாஜ் நட்சத்திர விடுதி பல்வேறு கிளைகளுடன் இயங்கி வரும் ஒரு நிறுவனமாகும்.  இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் 5 நட்சத்திர விடுதியாக தாஜ் ஹோட்டலின் கிளை நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலில் சாப்பிடுவதற்காக கடந்த வாரம் விருந்தினர் ஒருவர் இங்கு சென்றுள்ளார். விவசாய குடும்பத்தில்  பிறந்த ஊழியர்: அப்போது அவர் ஹோட்டலில் பணியாளர் காந்தி என்பவருடன் உணவு குறித்து ஆங்கிலத்தில் பேசியுள்ளார். ஆனால் விவசாய குடும்பத்தில் ஏழ்மை நிலையில் பிறந்த காந்தியால் விருந்தினருடன் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அந்த விருந்தினர், காந்தியின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். ஆனாலும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பதில் எதுவும் பேசாமல், காந்தி அமைதியாக இருந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து காந்தி தனது முகாமையாளரிடம் கூட புகார் எதுவும் அளிக்கவில்லையாம். இதையடுத்து காந்தியின் கன்னத்தில் விருந்தினர் அறைந்த சம்பவம் ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆக்ராவில் இயங்கி வரும் தாஜ் ஹோட்டல், தனது ஊழியரை தாக்கிய விருந்தினர் மீது நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. வாழ்நாள் தடை: இதுகுறித்து தாஜ் ஆக்ரா ஹோட்டலை நிர்வகித்து வரும் இயக்குநரான  பரிதோஷ் லதானி கூறுகையில், எமது ஊழியரின் கன்னத்தில் அறைந்த விருந்தினர் இனி வரும் காலங்களில் தாஜ் ஹோட்டலில் நுழைவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “எங்கள் பணியாளரிடம் அவர் செய்த இந்த பயங்கரமான செயலால், எங்கள் தாஜ் ஹோட்டலில் இருந்து அவரை வாழ்நாள் முழுவதும் தடை செய்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.  ஆங்கிலம் சரளமாக  பேச தெரியாது: காந்தி எங்கள் உணவகத்தில் ஒரு விருந்தினருக்கு உணவு பரிமாறி கொண்டிருந்தார். அவருக்கு ஆங்கிலம் சரளமாக பேச தெரியாது, அதனால் அந்த விருந்தினருடன் ஏதோ தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது.  அதன் விளைவாக, அந்த விருந்தினர் அவரை கன்னத்தில் அறைந்துவிட்டார். என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால், அவர் காந்தியை அறைந்தபோது, அவர் மெளனமாக இருந்தது தான். மேலும் அந்த ஊழியர் தாக்குதல் குறித்தும் புகார் எதுவும் அளிக்கவில்லை. நான் ஊழியரிடம் காரணம் கேட்டபோது, அவர் தன் வேலையை மிகவும் மதிப்பதால், அவமானத்தை தாங்கி கொள்ள தயாராக இருந்ததாக கூறினார்” என்று பதிவிட்டார். இதையடுத்து தாஜ் ஹோட்டல் இயக்குநருக்கு பயனர்கள் தங்களது வாழ்துக்களை தெரிவித்து வருகின்றனர். பயனர்கள் வாழ்த்து: இதுகுறித்து பயனர்கள் வெளியிட்ட பதிவில், “ஒரு தலைவராக, நீங்கள் எவ்வளவு செல்வந்தர், எவ்வளவு செல்வாக்கு மிக்கவர், அல்லது எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதல்ல. ஊழியர்களின் கண்ணியத்திற்கு குரல் கொடுப்பது தான், தங்களை உயர்ந்தவராக மாற்றுகிறது. மேலும் இது ஒரு கடினமான பாடம், ஆனாலும் ஒவ்வொரு உரிமையாளரும் இதை கற்றுக்கொள்ள வேண்டும்” என அவர்கள் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About