@vs_sahana_00: #நயினாதீவு. இந்த உலகத்துக்கே சக்தியைக் கொடுக்கும் ஒரு புண்ணிய பூமி. ஆனால் அந்த நயினாதீவின் கரைகளில் மோதி உடையும் கடல் அலைகளுக்குக் கீழே, ஆழத்தில், மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாத ஒரு பயங்கரமான மர்மம் புதைந்து கிடக்கிறது. அதுதான் நாகபுரம். ஆம்! நயினாதீவு எவ்வளவு சக்தி வாய்ந்ததோ அதற்கிணையான அபூர்வமான சக்திகள் வாய்ந்த ஓர் இடம் அந்தக் கடலுக்கு அடியில் இன்றும் சுவாசித்துக் கொண்டிருக்கிறது. கடலின் அடிமட்டம். சூரிய வெளிச்சம் ஒருபோதும் ஊடுருவாத காரிருள். அந்த இருளுக்குள் ஒரு பெரிய ஊரின் இடிபாடுகள் சிதைந்து கிடக்கின்றன. அந்த ஊருக்குள் எந்த மனிதனும் உயிருடன் இல்லை. மீன்களோ, மற்றைய கடல் வாழ் உயிரினங்களோ அந்தப் பகுதியை நெருங்குவதற்கே பயந்து நடுங்குகின்றன. அந்த இடிபாடுகளுக்கு நடுவில் ஒரு செவ்வக வடிவிலான குளம் ஒன்று இருக்கிறது. சுற்றிலும் உப்புக் கடல் நீர் சூழ்ந்திருந்தாலும் இந்தக் குளத்திற்குள் இருப்பது அதி தூய்மையான நன்னீர். அந்தக் குளத்தின் நீர் மட்டும் ஒருவிதமான பச்சை நிறத்தில் இருக்கும். அந்தக் குளத்தின் ஆழத்தில் பாசி படிந்த ஒரு கருங்கல்லின் மேல் கறுப்பு நிறக் கயிற்றால் கட்டப்பட்ட ஒரு தாயத்து கிடக்கிறது. அந்தத் தாயத்தில் இருந்து வெளிப்படும் சக்தி தான் அந்தப் பகுதி முழுவதையும் ஒரு அமைதிக்குள் கட்டிப் போட்டிருக்கிறது. இந்தத் தாயத்து எப்படி அங்கே வந்தது? இந்தக் கேள்விக்கான விடை பல நூறு வருடங்களுக்கு முந்தைய சரித்திரத்தில் புதைந்து கிடக்கிறது. ஒரு காலத்தில் நாகபுரம் கடலுக்கு அடியில் இருக்கவில்லை. அது சூரிய ஒளியில் செழித்தோங்கிய ஒரு தனித் தீவாக இருந்தது. அங்கே வாழ்ந்தவர்கள் முற்றுமுழுதாக மனித வடிவில் வாழ்ந்த நாகர்கள். நினைத்த மாத்திரத்தில் பெரும் நாகங்களாக உருமாறும் சக்தி படைத்தவர்கள். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த அந்த மக்களின் பிரம்மாண்டம் இன்று கற்பனைக்கு எட்டாதது. அன்றைய தினம் ஒரு விசேஷமான நாள். நாகபுரத்தின் மக்கள் அனைவரும் நயினாதீவு நாகபூசணி அம்மனை மனதார நினைத்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் கடும் விரதம் இருந்தார்கள். அந்த விரத காலத்தில் அவர்கள் தங்கள் அமானுஷ்ய சக்திகள் எதையும் பயன்படுத்தக் கூடாது என்பது அம்மனுக்கு அவர்கள் இட்ட சத்தியம். அவர்கள் வெறும் சாதாரண, பலவீனமான மனிதர்களைப் போலவே அந்த நாள் முழுவதும் இருக்க வேண்டும். அவர்களின் அதீத சக்தியோ, கொடிய விஷமோ அன்று வேலை செய்யாது. நாகர்களின் தலைவன் மிகவும் வலிமை வாய்ந்தவன். அவனது கழுத்தில்தான் அந்தப் பச்சை நிற நன்னீர்க் குளத்தின் அடியில் இப்போது கிடக்கிற சக்தி வாய்ந்த தாயத்து தொங்கிக் கொண்டிருந்தது. அந்தத் தாயத்து தான் முழு நாகபுரத்தின் உயிர்நாடி. அவனுக்கு நாகினி என்று ஒரு அழகான மகள் இருந்தாள். அவள் அம்மன் மீது அதீத பக்தி கொண்டவள். அதிகாலை வேளையில் கடலலைகளின் சீற்றத்திற்கு மத்தியில் எங்கேயோ தூரத்தில் ஒரு பெரிய நிழல் தெரிவதை நாகினி அவதானித்தாள். "அப்பு, கடலுக்குள்ளாலை பெரிய பெரிய கப்பல்கள் வாற மாதிரிக் கிடக்குது. ஆக்கள் ஆயுதங்களோடை இறங்குறாங்கள். எனக்கு ஏனோ செரியான பயமாக் கிடக்குதப்பு." நாகினி தனது தந்தையைப் பார்த்துப் பதற்றமாகக் கூறினாள். "பயப்படாதை மகள். நாங்கள் ஆச்சி நாகபூசணி அம்மனுக்கு விரதம் இருக்கிறம். அவா எங்களைக் காப்பாத்துவா. எந்தக் கொடியவனும் எங்களை நெருங்க ஏலாது. போய்ப் பூசையைப் பார்." என்று தந்தை அவளுக்கு ஆறுதல் கூறினார். ஆனால் அந்த ஆறுதல் சில நிமிடங்களில் இரத்த வெள்ளத்தில் மூழ்கிப் போனது. நாடுகாண் பயணிகள் என்ற போர்வையில் வந்தவர்கள் மனிதர்களே அல்லர். அவர்கள் பணத்துக்காகவும், தங்கம், ஆபரணங்களுக்காகவும் எதையும் செய்யும் அரக்கர்கள். தீவுக்குள் நுழைந்த அவர்கள் விரதத்தில் இருந்த நாகர்களை ஈவு இரக்கமின்றி வெட்டிச் சாய்த்தார்கள். "ஐயோ! எங்கடை சனத்தைக் கொல்லுறாங்களே! ஓடுங்கோ!" "எங்களை விட்டிடுங்கோடா! நாங்கள் அம்மனுக்கு விரதம் இருக்கிறம்!" சனங்களின் அவலக் குரல்கள் வானைப் பிளந்தன. பச்சிளங் குழந்தைகள் என்றும், பெண்கள் என்றும் பார்க்காமல் அந்தப் பாதகர்கள் வாள்களால் அனைவரையும் துண்டு துண்டாக வெட்டி வீழ்த்தினார்கள். குடல்கள் சரிந்து மணலில் விழுந்தன. துண்டிக்கப்பட்ட கைகளும் கால்களும் இரத்தக் குளத்தில் மிதந்தன. இரத்த வாடை அந்தத் தீவு முழுவதையும் ஆக்கிரமித்தது. நாகர்கள் தங்கள் சுய உருவமான பாம்புகளாக மாறி அவர்களைக் கொன்று குவித்திருக்க முடியும். ஆனால் அம்மனுக்கு இட்ட சத்தியத்தால் அவர்கள் தங்கள் சக்தியைப் பிரயோகிக்காமல் வெட்டுப்பட்டு மடிந்தார்கள். துடிதுடித்துச் சாகும்போதும் அவர்கள் உதடுகள் நாகபூசணி அம்மனின் நாமத்தையே உச்சரித்தன. அந்தக் கூட்டத்தின் தலைவன், வாளில் ஒழுகும் குருதியோடு நாகர்களின் தலைவனான நாகினியின் தந்தையை நெருங்கினான். அவனது கண்கள் அந்தத் தலைவனின்... அடுத்த பாகத்தை படிக்க Follow

𝖘𝖆𝖍𝖆𝖓𝖆_𝖇𝖔𝖔_ 🪄👻🍓
𝖘𝖆𝖍𝖆𝖓𝖆_𝖇𝖔𝖔_ 🪄👻🍓
Open In TikTok:
Region: LK
Wednesday 28 October 2026 12:13:08 GMT
35661
2796
2
165

Music

Download

Comments

vs_sahana_00
𝖘𝖆𝖍𝖆𝖓𝖆_𝖇𝖔𝖔_ 🪄👻🍓 :
நயினாதீவு. இந்த உலகத்துக்கே சக்தியைக் கொடுக்கும் ஒரு புண்ணிய பூமி. ஆனால் அந்த நயினாதீவின் கரைகளில் மோதி உடையும் கடல் அலைகளுக்குக் கீழே, ஆழத்தில், மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாத ஒரு பயங்கரமான மர்மம் புதைந்து கிடக்கிறது. அதுதான் நாகபுரம். ஆம்! நயினாதீவு எவ்வளவு சக்தி வாய்ந்ததோ அதற்கிணையான அபூர்வமான சக்திகள் வாய்ந்த ஓர் இடம் அந்தக் கடலுக்கு அடியில் இன்றும் சுவாசித்துக் கொண்டிருக்கிறது. கடலின் அடிமட்டம். சூரிய வெளிச்சம் ஒருபோதும் ஊடுருவாத காரிருள். அந்த இருளுக்குள் ஒரு பெரிய ஊரின் இடிபாடுகள் சிதைந்து கிடக்கின்றன. அந்த ஊருக்குள் எந்த மனிதனும் உயிருடன் இல்லை. மீன்களோ, மற்றைய கடல் வாழ் உயிரினங்களோ அந்தப் பகுதியை நெருங்குவதற்கே பயந்து நடுங்குகின்றன. அந்த இடிபாடுகளுக்கு நடுவில் ஒரு செவ்வக வடிவிலான குளம் ஒன்று இருக்கிறது. சுற்றிலும் உப்புக் கடல் நீர் சூழ்ந்திருந்தாலும் இந்தக் குளத்திற்குள் இருப்பது அதி தூய்மையான நன்னீர். அந்தக் குளத்தின் நீர் மட்டும் ஒருவிதமான பச்சை நிறத்தில் இருக்கும். அந்தக் குளத்தின் ஆழத்தில் பாசி படிந்த ஒரு கருங்கல்லின் மேல் கறுப்பு நிறக் கயிற்றால் கட்டப்பட்ட ஒரு தாயத்து கிடக்கிறது. அந்தத் தாயத்தில் இருந்து வெளிப்படும் சக்தி தான் அந்தப் பகுதி முழுவதையும் ஒரு அமைதிக்குள் கட்டிப் போட்டிருக்கிறது. இந்தத் தாயத்து எப்படி அங்கே வந்தது? இந்தக் கேள்விக்கான விடை பல நூறு வருடங்களுக்கு முந்தைய சரித்திரத்தில் புதைந்து கிடக்கிறது. ஒரு காலத்தில் நாகபுரம் கடலுக்கு அடியில் இருக்கவில்லை. அது சூரிய ஒளியில் செழித்தோங்கிய ஒரு தனித் தீவாக இருந்தது. அங்கே வாழ்ந்தவர்கள் முற்றுமுழுதாக மனித வடிவில் வாழ்ந்த நாகர்கள். நினைத்த மாத்திரத்தில் பெரும் நாகங்களாக உருமாறும் சக்தி படைத்தவர்கள். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த அந்த மக்களின் பிரம்மாண்டம் இன்று கற்பனைக்கு எட்டாதது. அன்றைய தினம் ஒரு விசேஷமான நாள். நாகபுரத்தின் மக்கள் அனைவரும் நயினாதீவு நாகபூசணி அம்மனை மனதார நினைத்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் கடும் விரதம் இருந்தார்கள். அந்த விரத காலத்தில் அவர்கள் தங்கள் அமானுஷ்ய சக்திகள் எதையும் பயன்படுத்தக் கூடாது என்பது அம்மனுக்கு அவர்கள் இட்ட சத்தியம். அவர்கள் வெறும் சாதாரண, பலவீனமான மனிதர்களைப் போலவே அந்த நாள் முழுவதும் இருக்க வேண்டும். அவர்களின் அதீத சக்தியோ, கொடிய விஷமோ அன்று வேலை செய்யாது. நாகர்களின் தலைவன் மிகவும் வலிமை வாய்ந்தவன். அவனது கழுத்தில்தான் அந்தப் பச்சை நிற நன்னீர்க் குளத்தின் அடியில் இப்போது கிடக்கிற சக்தி வாய்ந்த தாயத்து தொங்கிக் கொண்டிருந்தது. அந்தத் தாயத்து தான்
2026-10-28 14:18:41
13
vs_venthu16
𝖁𝖊𝖓𝖙𝖍𝖚_𝖇𝖔𝖔𝖔_🪄👻🍓 :
♥️
2026-10-28 15:40:15
3
To see more videos from user @vs_sahana_00, please go to the Tikwm homepage.

Other Videos


About