பாரிய விபத்தில் இருந்து பல உயிர்கள் மயிரிழையில் தப்பின! நுவரெலியா – கண்டி வீதியில் கொள்கலன் லொறி SLTB பஸ்ஸுடன் மோதி விபத்து – டாஷ் கெமராவில் முழுக் காட்சிகளும் பதிவு!
நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் டொப் பாஸ் தோட்டப் பகுதியில் கொள்கலன் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி மாலை சுமார் 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், பாரிய வளைவொன்றில் பயணித்த கொள்கலன் லொறி கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி நகர்ந்த நிலையில் பஸ்ஸுடன் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொள்கலன் லொறியின் பிரேக் கட்டமைப்பு உரிய முறையில் செயற்பட்டதன் காரணமாக பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு பிரேக் கட்டமைப்பு செயற்படத் தவறியிருந்தால், பல உயிர்களைப் பலிகொள்ளக்கூடிய பாரிய விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந்த விபத்து இடம்பெற்ற விதம், சம்பவத்தின் பின்னால் பயணித்துக்கொண்டிருந்த மற்றுமொரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த டாஷ் கெமராவில் முழுமையாகப் பதிவாகியுள்ளது.
ஆபத்தான வளைவுகள் நிறைந்த நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் கனரக வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் அதிக அவதானத்துடனும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
2026-10-31 09:53:31
2
vvvvvvv.33333777777 :
எப்ப எங்க நடந்தது 😔😔😔😔
2026-10-31 08:30:31
1
kwtevent :
CTB Bus wrong Stop
2026-10-31 09:58:33
1
Sasha Baby :
எங்க
2026-10-31 08:51:36
1
Udaya 🫶🫶 :
Y bus a stop panaga…
2026-10-31 09:23:04
1
𝑯𝒂𝒓𝒅𝒊𝒌 𝑴𝒂𝒅𝒉𝒖 🏏🧃💗 :
Enga ooru thaan 👀
2026-10-31 10:59:17
0
🖤🥀a̶l̶o̶n̶e̶ g̶i̶r̶l̶🥀🩶 :
நல்ல காலம் யார உயிருக்கும் சேதம் இல்ல... கண்டி road மாதிரி இருக்கு 🤔🤔
பஸ் சாரதியி பிழை .வண்டி பின்னால் வரும். என முன் யோசனையில்லை அறிவு பற்றாக்குறை ..மீண்டும் இடிபட்டவுடன் லாரி முன்னால் எடுக்கிறார் ..பஸ் நிருத்திக்கொண்டுயிருக்ஙிறார் மற்றவர் சொலுலிதான் பஸ்ஸை முன்னால் எடுக்கிறார் பஸ் சாரதி கவனம் குறைபாடு
2026-10-31 14:47:26
0
user922570105113 :
முதலின் டிரெலர் பாதையின் அடுத்த பக்கத்தில் இருந்து மேலே ஏறி இருக்க வேண்டும்
2026-10-31 10:34:30
0
Anfas Anfas :
😳😳😳
2026-10-31 09:01:55
1
meri :
[Pray][Pray][Pray]
2026-10-31 11:22:05
0
Ammu :
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
2026-10-31 11:28:06
0
user4387504987901 :
😭😭😭😭😭😭
2026-10-31 11:29:56
0
To see more videos from user @a7tv.com, please go to the Tikwm
homepage.