@porativupattu: கேதார கௌரி விரதம் தொடர்பான அறிவித்தலை கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், இவ்வாண்டுக்கான கேதார கௌரி விரதம் எதிர்வரும் 2026 நவம்பர் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. குறித்த விரதத்திற்கான அமாவாசைத் திதி (08.11.2026)ஆம் திகதி பகல் 11.56 மணிக்குத் தொடங்கி, (09.11.2026)ஆம் திகதி நண்பகல் 12.40 மணி வரை நீடிக்கின்றது. எனினும், உபவாச விரதம் ஒருநாள் மாத்திரமே மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, (08.11.2026)ஆம் திகதி உபவாசம் இருந்து, அன்றைய தினமே திருக்காப்பு அணிவிக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. மறுநாள் (09.11.2026)ஆம் திகதி காலை 8.30 மணிக்கு முன்னதாகப் பாரணை செய்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கந்த சஷ்டி விரதம் எதிர்வரும் (10.11.2026)ஆம் திகதி பிரதமைத் திதியில் அனுஷ்டிக்கப்பட வேண்டும் எனவும் கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஆன்மீக விரதங்களைக் கடைப்பிடிக்கும் பக்தர்கள் திதி நேரங்களைக் கவனத்தில் கொண்டு விரதங்களை அனுஷ்டிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தகவல்: கீழைக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியம். #porativupattunews #vellavelinews #Eastern #Hindu #Priests' Associationdeaf #